முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும் சட்டம், ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      தமிழகம்      அரசியல்
RS-Bharati 2023 04 14

சென்னை, தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும். 

ஓசூர் நீதிமன்றம் சம்பவம், தஞ்சையில் ஆசிரியை கொலை இரண்டும் தனிப்பட்ட விவகாரங்களின் அடிப்படையில் நடந்தவை. துாத்துக்குடி சம்பவத்தில் நடந்த உயிரிழப்புதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார் .

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 

 தஞ்சாவூரில் ஆசிரியை கொலை, ஓசூரில் வழக்கறிஞர் மீது தாக்குதல் தனிப்பட்ட விரோதத்தால் நடந்தவை. தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும், சட்டம் ஒழுங்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது, கொடநாடு பங்களா கொலை, கொள்ளை சம்பவங்கள் தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை. அ.தி.மு.க., ஆட்சியில் பல ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். 

மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்ப முட்டி போட்டு கரணங்கள் அடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன் மீதான சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று தடை வாங்கியவர் தான் எடப்பாடி. 

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணையை வரவேற்கும் எடப்பாடி, தன் மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்ப்பது ஏன்?  மனசாட்சியை அடகு வைத்து விட்டு எடப்பாடி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். 

தி.மு.க., ஆட்சியில் குற்றங்கள், கொலைகள் குறைந்துள்ளது. கொலைகளை நாங்கள் நியாயப்படுத்தவில்லை, ஆனால் அது பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை. தி.மு.க.,வின் சிறப்பான ஆட்சியை நீதிமன்றமே பாராட்டி உள்ளது. 

தமிழகத்தில் 79 சதவீதம் மக்கள் முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் 2020-ம் ஆண்டில் 1252 கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு 799 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது. பழனிசாமி போல் நாங்கள் கணக்கிட்டு சொன்னால் அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு லட்சம் கொலைகள் பதிவாகியுள்ளது. இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து