முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12,317 இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

ஈரோடு, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து 317  இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கான இலவச மருத்துவ முகாமை  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம்,  முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

 முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1333 கட்டிடங்கள் புதிய கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையை பொறுத்தவரை 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள், 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  ஒரு அறிக்கை வெயிட்டுள்ளார். அதில் 2023-ம் ஆண்டு தவறான சிகிச்சையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எலி மருந்துக்கு பதிலாக மாற்ற ஊசி போடப்பட்டது என கூறி உள்ளார். 

 கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து 317  இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.  அந்த திட்டத்தில் 2 கோடி பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். 

வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 கோடியாவது பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து