முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது: உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி ஜலுஷ்னி கருத்து

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      உலகம்
Ukraine 2024-11-23

Source: provided

கீவ் : ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கி விட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். 

உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி ஜலுஷ்னி கூறுகையில்,

ரஷ்யா - உக்ரைன் மோதலில் ரஷ்யாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப்போர் தொடங்கி விட்டது என்று அர்த்தம் என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் 2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டது. 

10,000 வடகொரிய ஆயதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ஈரானின் டிரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே உக்ரைனில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது. ஆனால், போரில் தனியாக வெல்லுமா என்று உறுதியாக கூறமுடியாது. 

வட கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு முன்னால் உள்ளனர். உக்ரைனில், ஈரானிய வீரர்கள் பொதுமக்களை எந்தவித பாரபட்சம் இல்லாமல் கொல்கிறார்கள். உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

ஆனால் உக்ரைன் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான். சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதை புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் வலேரி ஜலுஷ்னி, உக்ரைனின் ராணுவ மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார்.

ரஷ்யா -  உக்ரைன் போரில் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஜலுஷ்னி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  கடந்த பிப்ரவரியில் ராணுவத் தளபதியாக இருந்த ஜலுஷ்னியை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. மேலும், ஜலுஷ்னியின் வளர்ந்து வரும் புகழ் அவரை ஜெலன்ஸ்கிக்கு அரசியல் போட்டியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து