முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனத்துறையின் கட்டுப்பாட்டில் மீண்டும் வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு வர வேண்டும்: ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை : வேட்டைத் தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையில்  அனைத்து நீர்வளங்களையும், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும், கண்காணிக்கவும், அவை தொடர்பாக அரசின் சார்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர். இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல்,  அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசிலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

தற்போது வனத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான வேட்டைத் தடுப்பு காவலர்களை தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றியுள்ளது தி.மு.க. அரசு. 

இதன்மூலம் வனத் துறைக்கும், வனத் துறையில் பணியாற்றி வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறி, அவர்களுடைய பணி நிரந்தரக் கோரிக்கையை நிராகரிப்பதற்காக இத்தகைய முடிவினை தி.மு.க. அரசு எடுத்துள்ளது. 

காடுகளை பாதுகாக்கும் வகையில், வன விலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதைத் தடுத்தல், வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்தல், மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் விலங்குகளை வனப் பகுதிக்கு திருப்பி அனுப்புதல் போன்ற முக்கியமானப் பணிகளை வேட்டை தடுப்புக் காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், சட்ட விரோதச் செயல்கள் நடப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.  

எனவே முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, வனத் துறையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான வேட்டை தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தேர்தல் வாக்குறுதியின்படி அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து