முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகாலயா இடைத்தேர்தல்: காம்பேக்ரே தொகுதியில் முதல்வரின் மனைவி மெஹ்தாப் பூண்டி வெற்றி

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      இந்தியா
Meghalaya 2024-11-23

Source: provided

அகர்தலா : மேகாலயா மாநிலம் காம்பேக்ரே சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாநில முதல்வரின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா வெற்றி பெற்றார். 

மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுடன் 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 46 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில், மேகாலயா மாநிலம் காம்பேக்ரே சட்டசபை தொகுதிக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மேகாலயாவில் பா.ஜ.க. ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளராக முதல்வர்  கான்ராட் சங்மாலின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா போட்டியிட்டார். 

இந்த நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மெஹ்தாப் சண்டி சங்மா, 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 12,679 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சதிராணி எம் சங்மா 8,084 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரசின் ஜிங்ஜாங் மரக் 7,695 வாக்குகளைப் பெற்றார். மனைவியின் வெற்றி குறித்து முதல்வர்  சங்மா கூறுகையில்,

காம்பேக்ரே மக்கள் வளர்ச்சிக்காக வாக்களித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில் காம்பேக்ரே மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வாக்காளர்கள் புத்திசாலிகள், அவர்களுக்கு எது நல்லது, எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து