முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக அதிகரிப்பு

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று (நவ. 23) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையான நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக விலை உயர்வு தொடர்கிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 உயா்ந்துள்ளது.

சென்னையில் கடந்த அக்.31-ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.59,640 வரை உயர்ந்து விற்பனையானது. தொடா்ந்து, அமெரிக்க அதிபர் தோ்தல் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது. இதன்படி, நவ.1 முதல் நவ.16 வரை தங்கம் சவரனுக்கு ரூ.4,160 குறைந்து, சவரன் ரூ.55,480-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நவ.18-ஆம் தேதி சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960-க்கும், நவ.19-இல் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கும், நவ.20 -இல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,920-க்கும், நவ.21-இல் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160-க்கும், விற்பனையானது. இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமையும் (நவ.22) கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 7,225-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், நேற்று (நவ. 23) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து 7,300-க்கும், சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ. 58,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை தொடர்ந்து 4-வது நாளாக எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.101-க்கும், கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையானது. கடந்த 6 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 உயா்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து