முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 மாநிலங்களில் 48 சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

புதுடெல்லி : இந்தியா முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பிகார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகத்தில் 3, கேரளம், மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தரகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதி என மொத்தம் 48 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. இத்துடன் கேரளத்தின் வயநாடு மற்றும் மகாராஷ்டிரத்தின் நான்தெட் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டு அதற்கான வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடைபெற்றது.

தொகுதி வாரியாக வெற்றி பெற்றவர்களின் நிலவரங்கள் வெளியானது:

உத்தரப் பிரதேசம்:

உ.பி.யில் பாஜக கூட்டணி 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 1. மீராபூர் - மிதிலேஷ் பால் (ஆர்எல்டி) - வெற்றி, 2. குந்தர்க்கி - ராம்வீர் சிங் (பாஜக) - வெற்றி, 3. காசியாபாத் - சஞ்சீவ் சர்மா (பாஜக) - வெற்றி, 4. காயீர் - சுரேந்தர் திலேர் (பாஜக) - வெற்றி, 5. புல்பூர் - தீபக் படேல் (பாஜக) - வெற்றி, 6. கதேஹரி - தர்மராஜ் நிஷாத் (பாஜக) - வெற்றி, 7. மஜாவான் - சுச்சிஸ்மிதா மௌர்யா (பாஜக) - வெற்றி,  8. கர்ஹால் - தேஜ்பிரதாப் சிங் (சமாஜ்வாதி) - வெற்றி, 9. சிஷாமௌ - நசீம் சோலங்கி (சமாஜ்வாதி) - வெற்றி, 

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் பாஜக 5 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 1. ஜுன்ஜுனு - ராஜேந்திர பேம்பூ (பாஜக) - வெற்றி, 2. ராம்கர் - சுகவந்த் சிங் (பாஜக) - வெற்றி, 3. தியொளி - ராஜேந்திர குர்சார் (பாஜக) - வெற்றி, 4. கின்சார் - ரேவந்த் ராம் தங்கா (பாஜக) - வெற்றி, 5. சாலும்பர் - சாந்தா அம்ரித் லால் மீனா (பாஜக) - வெற்றி, 6. தௌசா - தீன் தயாள் ( காங்கிரஸ்) - வெற்றி, 7. சோரசி - அனில் குமார் கதாரா (பிஏபி) - வெற்றி, 

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 1. சீதாய் - சங்கீதா ராய் (திரிணாமுல் காங்.) - வெற்றி, 2. மாதரிஹாத் - ஜெய்பிரகாஷ் (திரிணாமுல் காங்.) - வெற்றி, 3. நையிஹாத்தி - சனத் டே (திரிணாமுல் காங்.) - வெற்றி, 4. ஹரோவா - ரபியுல் இஸ்லாம் (திரிணாமுல் காங்.) - வெற்றி, 5. மெதினிபூர் - சுஜோய் ஹஸ்ரா (திரிணாமுல் காங்.) - வெற்றி, 6. தல்தங்ரா - ஃபல்குனி சிங்கபாபு (திரிணாமுல் காங்.) - வெற்றி.

அசாம்:

அசாமில் பாஜக 3 தொகுதிகளிலும், அசோம் கண பரிஷத் (ஏஜிபி) 1 தொகுதியிலும், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. 1. தோலாய் - நிஹார் ரஞ்சன் தாஸ் (பாஜக) - வெற்றி, 2. பேஹாலி - திகந்தா கதோவால் (பாஜக) - வெற்றி, 3. சமாகுரி - தீப்லு ரஞ்சன் சர்மா (பாஜக) - வெற்றி, 4. சித்லி - நிர்மல் குமார் பிரம்மா (யுபிபிஎல்) - வெற்றி, 5. போங்காய்கான் - திப்திமாயி சௌதரி (ஏஜிபி) - வெற்றி.

பிகார்:

பிகாரில் 4 தொகுதிகளிலும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. 1. தராரி - விஷால் பிரசாந்த் (பாஜக) - வெற்றி, 2. ராம்கர் - அஷோக் குமார் சிங் (பாஜக) - வெற்றி, 3. இமாம்கஞ்ச் - தீபா குமாரி (ஹெச்ஏஎம் - எஸ்) - வெற்றி, 4. பெலகஞ்ச் - மனோர்மா தேவி (ஜேடி - யு) - வெற்றி, 

பஞ்சாப்:

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 3 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 1. தேரா பாபா நானக் - குர்தீப் சிங் ரந்த்வா (ஆம் ஆத்மி) - வெற்றி, 2. சப்பேவால் - இஷாங் குமார் (ஆம் ஆத்மி) - வெற்றி, 3. கித்தெர்பாஹா - ஹர்தீப் சிங் (ஆம் ஆத்மி) - வெற்றி, 4. பர்னாலா - குல்தீப் சிங் திலான் (காங்கிரஸ்) - வெற்றி.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1. சிக்கௌன் - பதான் யாசிராமெத்கான் (காங்கிரஸ்) - வெற்றி, 2. சந்தூர் - அன்னபூர்ணா (காங்கிரஸ்) - வெற்றி, 3. சன்னப்பட்னா - சி பி யோகேஷ்வரா (காங்கிரஸ்) - வெற்றி, 

கேரளம்:

கேரளத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 1. பாலக்காடு - ராகுல் மம்கூட்டத்தில் (காங்கிரஸ்) - வெற்றி, 2. செலக்கரா - யு ஆர் பிரதீப் (மா. கம்யூ) - வெற்றி.

மத்தியப் பிரதேசம்:

1. விஜய்பூர் - முகேஷ் மல்ஹோத்ரா (காங்கிரஸ்) - வெற்றி, 2. புத்னி - ராம்கந்த் பார்கவா (பாஜக) - வெற்றி.

சிக்கிம்:

சிக்கிமில் இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடத்தப்பட்டத் தேர்தல்களில் சிக்கிம் கிரந்த்கரி மோர்ச்சா கட்சி (எஸ்கேஎம்) வேட்பாளர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1. சோரங் - ஆதித்யா கோலாய் (எஸ்கேஎம்) - வெற்றி, 2. நாம்ச்சி - சதீஷ் சந்திர ராய் (எஸ்கேஎம்) - வெற்றி.

சத்தீஸ்கர்:

1. ராய்பூர் நகர் தெற்கு - சுனில் குமார் சோனி (பாஜக) - வெற்றி

குஜராத்:

1. வாவ் - தாகோர் ஸ்வரூப்ஜி சர்தார்ஜி (பாஜக) - வெற்றி

மேகாலயா:

மேகாலயாவில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சி பேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 1. காம்பெக்ரே - மேதாப் சந்தி அகிடோக் சங்மா (என்பிபி) - வெற்றி.

உத்தரகாண்ட்:

1. கேதர்நாத் - ஆஷா நௌதியல் (பாஜக) - வெற்றி. மேலும், மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கேரளத்தின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிரத்தின் நான்தெட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சந்துக்ராவ் வெற்றி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து