முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சுகாதார மைய இயக்குநராகஇந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட வாய்ப்பு

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      உலகம்
Amerika

Source: provided

 

வாஷிங்டன்: அமெரிக்காவின் சுகாதார மைய இயக்குநராக கொல்கத்தாவில் பிறந்த டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், தனது பிரச்சார குழுவில் இருந்த நபர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கொல்கத்தாவில் கடந்த 1968-ம் ஆண்டு பிறந்தார். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மருந்து கொள்கை பேராசிரியராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். அமெரிக்க அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சித்த இவர், டிரம்ப் பிரச்சார குழுவில் இணைந்தார். இவர் அமெரிக்காவின் தேசிய சுகாதார மையங்களின் (என்ஐஎச்) அடுத்த இயக்குநராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அமைப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உயிரி மருத்துவ ஆராய்ச்சியை மேற்பார்வையிட்டு வருகிறது. இந்நிலையில் இவர் அமெரிக்க சுகாதார மையங்களின் இயக்குநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப் அறிவிப்புக்கு பின்பே இந்த முடிவு இறுதி செய்யப்படும். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து