முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிச. 4-ல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      இந்தியா
Rocket 2023 06 09

புது டெல்லி, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக் கோளான ப்ரோபாவை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிசம்பர் 4-ம் தேதி  பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக் கோள்கள் மட்டுமின்றி, வர்த்தக ரீதியாக வெளிநாடுகளுக்கும் செயற்கைக் கோள்களை ஏவி வருகிறது.

அந்த வகையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக் கோளான ப்ரோபாவை டிசம்பர் 4-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி 59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.

மொத்தம் 1800 எடையுள்ள ப்ரோபா செயற்கைக் கோள், சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஆய்வு செய்வதற்காக, ஐரோப்பிய விண்வெளி மையத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவோர், நேற்று முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து