முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர முதல்வர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு ஏக்நாத் ஷிண்டே தகவல்

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      இந்தியா
Eknath-Shinde 2023-12-03

Source: provided

 

புது டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மகராஷ்டிர காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிராவில் பா..., சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், புதிய முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் பா... மூத்த தலைவர் அமித் ஷா மற்றும் பா... தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

 பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது,

சந்திப்பு நன்றாகவும் நேர்மறையாகவும் இருந்தது. இதுவே முதல் சந்திப்பு. அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசித்தோம். மகாயுதியின் இன்னொரு கூட்டம் இருக்கும். இந்தக் கூட்டத்தில் முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த சந்திப்பு மும்பையில் நடைபெறும். இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்றும் கூறினார். 

அமித் ஷா உடனான சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேவேந்திர பட்னவிஸ், முக்கியமான மகராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலின் போது, போர்க்களத்தில் பெரும் ஆதரவை அளித்ததற்காகவும், தொண்டர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியதற்காகவும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மகராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதற்கான மகாயுதி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து