முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் டிச.2 வரை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

 

 

புது டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் டிசம்பர் 2-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின. அதே போல கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது.அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதனை தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். அதன்படி மாநிலங்களவை டிச.2-ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதே போல, மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது எதிரிக்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.

இதனால் மக்களை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். அதை தொடர்ந்து மாநிலங்களவை டிச.2-ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 4-வது நாளாக இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து