எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூடுவோம், கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்புகளாக சேவாபாரதி, ஏ.பி.வி.பி, தர்மரக்ஷண சமிதி, விசுவ இந்துபரிசத் என 200 அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடுவது மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை கூட்டி வரும் நிகழ்ச்சி கூடுவோம், கூட்டுவோம் என்ற தலைப்பில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் நிகழ்ச்சி நாளை (1-ம் தேதி) நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடக்கிறது. தமிழகத்திலும் வார்டுகள் அளவில் நடத்துகிறார்கள். அந்த வார்டுகளில் இருக்கும் எந்தெந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் 5 செயல்கள் பற்றி பேசுகிறார்கள். போதை ஒழிப்பு- ஒரு தனி மனிதனாக என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தை கைவிட்டு தானும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களும் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
குடும்பங்களில் ஒற்றுமையை உருவாக்குதல்-குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, பேசுவது போன்ற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.சமூக நல்லிணக்கம், நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாதி, மொழி, அந்தஸ்து என்ற பேதமில்லாமல் அனைவருடனும் பழகும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
சுற்றுசூழல் பாதுகாப்பு- வீடுகளில் தண்ணீரின் சிக்கனம், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரித்தல், பிளாஸ்டிக் கை தவிர்த்து துணி பை களை பயன்படுத்த பழகி கொள்தல். சுதேசி வாழ்வியல், வீட்டிலும், முடிந்த இடங்களிலும் தாய்மொழியில் பேசும் பழக்கத்தை வளர்த்தல், பாரம்பரிய உடைகள் அணிவது, உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் வாங்குதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
குடிமகனின் கடமைகளாக சட்டத்தை மதித்து நடப்பது. உதாரணமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அரசின் சட்டம். அதை கடைபிடிக்க வேண்டும். இப்படி எல்லாவிதமான மாற்றங்களையும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களில் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள்.
காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடை பெறும் இந்த நிகழ்ச்சிகளில் தலைவர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை அனைவரும் தங்கள் பகுதியில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
மோசமான வெள்ளம்: மலேசியாவில் 3 பேர் பலி
29 Nov 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.