முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: மேலூர் மக்களுக்கு அ.தி.மு.க துணை நிற்கும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      தமிழகம்
eps

Source: provided

 

சென்னை: டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மேலூர் பகுதி மக்களுக்கு அ.தி.மு.. துணை நிற்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே  அரிட்டாப்பட்டி-நாயக்கர்பட்டியில் வேதாந்தா குழுமத்தின் இந்துஸ்தான் ஷிங்க் நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் நேற்று கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின்   மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீதோ, அவர்கள் சார்பில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கை என்பது கிடையாது.

மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டங்களுக்கு  அதிமுக என்றும் துணைநிற்கும். அ.தி.மு.. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து  அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்.

பொதுமக்களின் உணர்வுகளையும், தமிழகத்தின்  முதல் பல்லுயிர் தளமான அரிட்டாபட்டி பாதிக்கப்படுவதையும் கருத்திற்கொண்டு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.. அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து