முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளென் பிலிப்ஸ் அபாரம்

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 348க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் முடிவில் 74 ஓவர்களில் 319/5 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் ஃபிலிப்ஸ் போட்டியின் 53ஆவது ஓவரில் சௌதி ஓவரில் இங்கிலாந்து வீரர் ஆலி போப் அடித்த பந்தினை அற்புதமாக தாவி பிடிப்பார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஃபீல்டிங்குக்கு பெயர்போன அணி என்றால் அதில் நியூசிலாந்து நிச்சயமாக இருக்கும். அதிலும் கிளென் ஃபிலிப்ஸ் நம்பமுடியாத அளவுக்கு ஃபீல்டிங் செய்வார். இந்தக் காட்சிகளை சோனி லைவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் “இது பறவை, விமானம், இது கிளென் ஃபிலிப்ஸ்” எனக் குறிப்பிட்டு வர்ணித்துள்ளது.

____________________________________________________

புரூக் சதத்தால் மீண்ட இங்கிலாந்து

நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 348-க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் முடிவில் 74 ஓவர்களில் 319/5 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து சார்பாக ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆடுகளத்தில் ஹாரி புரூக் 132 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

நியூசி. சார்பில் நாதன் ஸ்மித் 2 விக்கெட்டுகளும் டிம் சௌதி, மாட் ஹென்றி, வில்லியம் ரூர்கே தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 29 ரன்கள் பின்னிலையில் இருந்தாலும் இங்கிலாந்து வலுவான நிலையிலேயே இருக்கிறது. மீதமுள்ள 3 நாள்களில் யாருடைய ஆதிக்கம் தொடர்கிறதோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து