முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலி 100-க்கும் அதிகமானோர் மாயம்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      உலகம்
Nigeria 2024-11-30

Source: provided

 

லாகோஸ்: நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானோர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் நேற்று முன்தினம் இந்தப் படகு விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் விபத்து நடந்தபோது படகில் 200-க்கும் அதிகமானோர் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

அவர்கள் அனைவரும் கோகி பகுதியில் இருந்து நைகர் நகரில் உள்ள உணவுச் சந்தைக்குச் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் இதுவரை 27 சடலங்களை மீட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். விபத்து நடந்து 12 மணி நேரத்துக்கும் மேலாகியும் கூட மாயமானவர்களில் யாரும் உயிருடன் கிடைக்கவில்லை என்று கோகி மாவட்ட பேரிடர் சேவைகள் துறை செய்தித் தொடர்பாளர் சாண்ட்ரா மூஸா தெரிவித்துள்ளார். 

விபத்துக்கான காரணத்தை அரசு தரப்பு உறுதி செய்யாவிட்டாலும் கூட உள்ளூர் ஊடகங்கள் படகில் அதிகளவில் மக்கள் ஏற்றப்பட்டதாலேயே விபத்து நடந்த்து எனத் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் சரியான சாலை வசதிகள் இல்லாத பகுதிகள் நிறைய இருக்கின்றன. அப்பகுதிகளில் எல்லாம் இன்றளவும் படகு சவாரி தான் ஒரே போக்குவரத்து வசதியாக இருக்கிறது.

இந்நிலையில் அந்தப் படகுகளில் அதிகளவில் மக்களை ஏற்றுவதும் தொடர்கதையாக இருக்கிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. கடந்த அக்டோபர் 3-ம் தேதி நடந்த படகு விபத்தில் 60 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து