முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு வீச்சில் மழை நிவாரண நடவடிக்கை; ஆய்வுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      தமிழகம்
Stalin 2024-11-26

Source: provided

 

சென்னை: மழை நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக  முதல்வர் மு.. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புயல் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் மு.. ஸ்டாலின் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தினேன். மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரவு நிச்சயமாக கடுமையான மழை பெய்யும் என்பதால், நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளது. 

கனமழை, புயலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இரவு முழுவதும் மழை பெய்த போதும் சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை.

வழக்கமாக மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் மு.. ஸ்டாலின் கூறினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து