எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெஞ்சல் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும். ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 2-ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 3-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 day ago |
-
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
மழைக்காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தல்
29 Nov 2024சென்னை, மழைக் காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: வங்காளதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்
29 Nov 2024புதுடெல்லி, சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை வங்காளதேச அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
அதி கனமழை எச்சரிக்கை மாவட்டங்களில் 2,229 நிவாரண முகாம்கள்,பேரிடர் மீட்புக்குழுக்கள்: தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு
29 Nov 2024சென்னை : ஃபெஞசல் புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை மாவட்டங்களில் 2,229 நிவாரண முகாம்களும், பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவித்த
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் பதிவு : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி
29 Nov 2024மும்பை : மகாராஷ்டிர தேர்தலில் முரண்பாடுகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
ஜூலை-செப். காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்தது
29 Nov 2024புதுடெல்லி, வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-11-2024.
30 Nov 2024 -
ஒடிசாவில் டி.ஜி.பி. மாநாடு: பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
29 Nov 2024புவனேஸ்வர் : ஒடிசாவில் அகில இந்திய டி.ஜி.பி./ஐஜிபி மாநாட்டில் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இன்று பங்கேற்கின்றனர்.
-
சென்னையில் தொடரும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
30 Nov 2024சென்னை, தொடரும் கனமழையை அடுத்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.
-
பழங்குடியின தலைவரின் கொள்ளுப்பேரன் உயிரிழப்பு
30 Nov 2024 -
பஞ்சாப் எல்லை அருகே டிரோன்கள், போதைப்பொருள் பறிமுதல்
30 Nov 2024சண்டிகர், பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் 1.132 கிலோ போதைப்பொருள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.