முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெஞ்சல் புயல் பாதிப்பு: புதுவை துணை நிலை ஆளுநர் நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2024      இந்தியா
Kailashnathan 2024-12-02

Source: provided

புதுச்சேரி : பெஞ்சல் புயல் மற்றும் பெருமழை காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் புதுச்சேரி பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று நேரில் பார்வையிட்டார். புதுச்சேரி கடற்கரை சாலை, வைத்திகுப்பம் கடற்கரை பகுதி, தேங்காய்திட்டு துறைமுகம் ஆகியவற்றை பார்வையிட்டார். 

அதனைத் தொடர்ந்து ஆரியபாளையம் மேம்பாலம், சங்கராபரணி ஆறு, வில்லியனூர் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார்.

புதுச்சேரியில் உள்ள துணைமின் நிலையங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை அறிந்து அது பற்றிய விவரங்களை துணைநிலை ஆளுநர், அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளரிடம் கேட்டறிந்தார். 

தொடர்ந்து கனகன் ஏரியை பார்வையிட்ட அவர் அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். அந்த உணவினைச் சுவைத்து பார்த்தார். அப்போது  ஆறுமுகம் எம்.எல்.ஏ உடன் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை லாஸ்பேட்டையில் உள்ள மாநில அவசரகால உதவி மையத்தில் அதிகாரிகளோடு அவர் ஆலோசனை நடத்தினார். 

தலைமைச் செயலர் சரத் சவுகான், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், துணைநிலை ஆளுநரின் செயலர் நெடுஞ்செழியன், டி.ஐ.ஜி சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி. கலைவாணன், சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள் ஆகியோர் இந்த ஆய்வின் போது பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து