முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தாக்கப்பட்டதன் 23-ம் ஆண்டு தினம்: உயிர்நீத்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      இந்தியா
Modi 2024 12 13

Source: provided

புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பாராளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டை முன்னிட்டு இந்த தாக்குதலில் உயிர்தியாகம் செய்தவர்களின் புகைப்படங்கள் பாராளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த படங்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த தாக்குதலை தனது எக்ஸ் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "2001 பாராளுமன்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் தியாகம் என்றென்றும் நம் தேசத்தை ஊக்குவிக்கும். அவர்களின் துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "2001ஆம் ஆண்டு பாராளுமன்றத் தாக்குதலின் போது கடமையில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த வீரத் தியாகிகளுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் துணிவும் தியாகமும் என்றும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும். நமது ஜனநாயகத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

2001ல் நடந்த பாராளுமன்ற தாக்குதலை பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் நடத்தினர். அவர்களுக்கு எதிராக இந்திய பாதுகாப்புப் படையினர் துணிச்சலுடன் சண்டையிட்டனர். இந்த மோதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். தோட்டக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து