முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற நாட்களை குறைக்கும் விவகாரம் தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      தமிழகம்
Ops 2024-12-13

Source: provided

சென்னை: சட்டமன்ற நாட்களை குறைக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 376-ல், கழக ஆட்சியில் சட்டமன்றம் குறைந்தது 100 நாட்களுக்கு மேல் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2021-ம் ஆண்டில் 29 நாட்களும், 2022-ம் ஆண்டில் 33 நாட்களும், 2023-ம் ஆண்டில் 29 நாட்களும், 2024-ம் ஆண்டில் 18 நாட்களும் சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. அதாவது 1,365 நாட்களில் வெறும் 109 நாட்கள் மட்டுமே சட்டமன்றம் கூடியுள்ளது. அதுவும், குறிப்பாக குளிர்கால கூட்டத் தொடரை இரண்டே நாளில் முடித்து சாதனை படைத்துள்ள அரசு தி.மு.க. அரசு. இந்த வாக்குறுதியில் கூட தி.மு.க. இரட்டை வேடத்தை கடைபிடிப்பது ஆட்சி அலங்கோலத்தின் உச்சகட்டம்.

ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிக் கூடமாக ஆக வேண்டும். அப்பொழுதுதான் ஜனநாயகம் வளரும் என்றார் பேரறிஞர் அண்ணா. போறிஞர் அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லிக் கொண்டு, ஜனநாயகத்தின் மையமாக விளங்கும் சட்டமன்றத்திலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் மனக்குமுறலை மக்கள் பிரதிநிதிகள் மூலம் ஜனநாயக ரீதியில் வலியுறுத்தும் இடமாக விளங்கும் சட்டமன்றத்தை இனி வருங்காலங்களிலாவது அதிக நாட்கள் கூட்டவும்; ஆட்சியின் அவலங்களை, மக்களின் குறைகளை சுட்டிக்காட்டும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பினை வழங்கவும் நடவடிக்கை எடுத்து, ஜனநாயகம் தழைத்தோங்குவதை உறுதி செய்ய வேண்டுமென்று முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து