முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கிக்கு இ-மெயிலில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      இந்தியா
RBI 2023-04-27

மும்பை, மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக நவம்பர் 16-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி (சி இஓ) என்று கூறினார். மேலும் அவர் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது. 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து