முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அல்லு அர்ஜூன் கைது: ஜெகன் மோகன் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      சினிமா
Allu-Arjun 2024-12-13

ஐதராபாத், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த 4ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றார். அவரை காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தைய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் நேற்று  கைது செய்தனர். 

அல்லு அர்ஜூன் கைதுசெய்யப்பட்டதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அரசியல் தலைவர்களும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனின் கைதுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது. திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு அவர் ஆறுதல் தெரிவித்துவிட்டார். மேலும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டார். இருப்பினும் இச்சம்பவத்திற்கு அவரை நேரடியாக பொறுப்பாளியாக்குவது எந்த விதத்தில் நியாயம்? கூட்ட நெரிசலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அர்ஜூன் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து