முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      இந்தியா
Karnataka-high-court

பெங்களூரு, ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமியை கொலை செய்திருந்தார். இதுதொடர்பாக பெங்களூரு காமாட்சி பாளையா போலீசார் தர்ஷனை கைது செய்து பல்லாரி சிறையில் அடைத்தார்கள். சிறையில் முதுகு வலியால் அவதிப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்ள கர்நாடக ஐகோர்ட் 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, அவர் பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கர்நாடக ஐகோர்ட்டில் நிரந்தர ஜாமீன் கோரியும் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது கடந்த 9-ந்தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். அதே நேரத்தில் நேற்று முன்தினம் வரை தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை.

இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் அறிவிக்கப்படும் என்று கர்நாடக ஐகோர்ட் தெரிவித்தது. அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து