முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 2,4 தேர்வு பாடத்தில் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

சென்னை,  குரூப்2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

அரசு வேலையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பது பலரின் கனவு. குறிப்பாக அதிக காலியிடங்கள் அறிவிக்கப்படும் தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். 

இந் நிலையில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றி உள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து