முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவாலை வாய்ப்புகளாக நாம் மாற்ற வேண்டும்: துணை ஜனாதிபதி தன்கர் பேச்சு

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      இந்தியா
Jagadeep 2024-12-10

புதுடெல்லி, நிறுவனங்களோ அல்லது தனி நபரோ ஆய்வுக்கு உட்படுத்தப்படாவிட்டால் சீரழிவு ஏற்படுவதை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சவாலை நாம் வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஐசிடபிள்யுஏ-வில் இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு கணக்குகள் மற்றும் நிதி சேவைகளின் 50-வது நிறுவன தின நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசிய  துணைத் குடியரசு தலைவர்  ஜக்தீப் தன்கர் பேசியதாவது:- 

இந்தியாவின் ஜனநாயகப் பயணம், பன்முகத்தன்மை, பரந்த மக்கள்தொகைத் திறன் ஆகியவை தேசிய முன்னேற்றத்தைத் தூண்டுகின்றன. நாம் முன்னோக்கி செல்லும் பாதையை பட்டியலிடுகையில், ஜனநாயக ஆரோக்கியமும் பொருளாதார உற்பத்தியும் தேசிய வளர்ச்சியில் பிரிக்க முடியாத பங்காளிகள் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். 

நம்மில் உள்ள நான் என்னும் தன்முனைப்பு அடக்க முடியாதது. அதனைக் கட்டுப்படுத்த நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். தன்முனைப்பு யாருக்கும் பயனளிக்காது. அதேநேரத்தில், அதை வைத்திருக்கும் நபரை அது சேதப்படுத்துகிறது. சுய பரிசோதனை மிகவும் முக்கியமானது. ஒரு தனிநபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கான உறுதியான வழி அது. நவீன அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப அறிவாளிகளாகவும், மாற்றத்தை எளிதாக்குபவர்களாகவும், பாரம்பரிய நிர்வாக எல்லைகளைத் தாண்டியவர்களாகவும் இருக்க வேண்டும். 

நாம் இன்னொரு தொழிற்புரட்சியின் உச்சத்தில் இருக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்மை ஆக்கிரமித்துள்ளன. நம் வீட்டில், அலுவலகத்தில், எல்லா இடங்களிலும் அது நம்முடன் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மெஷின் லேர்னிங், பிளாக்செயின் போன்றவை அவை. சவாலை நாம் சமாளிக்க வேண்டும், சவாலை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அவரவர் லட்சியங்களுடன் தடையின்றி இணைக்க வேண்டும். நமது சேவைகள் இன்னும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அடிப்படை ஒருமைப்பாட்டைப் பேணுவதன் மூலம் அவர்கள் விரைவான தொழில்நுட்ப சவால்கள், சமூக சவால்களுக்கு மாற்றியமைக்க வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் நமது சிறப்புரிமை இப்போது அதிகப் பொறுப்பைக் கொண்டுள்ளது. நாம், வளர்ந்த தேசத்தின் பார்வையை 2047-ல் உணர வேண்டும்.

 

குடும்பத்தில் அல்லது அமைப்பில் எப்போதும் பிரச்சினைகள் இருக்கும். சிக்கல்கள் இயற்கையானவை. தோல்வியைப் போல முன்னோக்கிச் செல்ல சிக்கல்கள் நமக்கு உதவுகின்றன. தோல்வி என்பது பின்னடைவு அல்ல, அடுத்த முறை வெற்றியை அடைய அது உங்களைத் தூண்டுகிறது’.என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து