முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் மழை எதிரொலி: வைகை அணை நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      தமிழகம்
vaigai dam-2023-05-04

Source: provided

தேனி : தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை வினாடிக்கு 139 கன அடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 2 மணிக்கு கிடுகிடுவென உயர்ந்தது. வினாடிக்கு 13,680 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் பாசனம், குடிநீர் ஆதாரமாக வைகை அணை விளங்கி வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 49.50 அடியாக இருந்தநிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 55.25 அடியை எட்டி உள்ளது.

தற்போது அணைக்கு வினாடிக்கு 10,347 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்ட நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து