முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      விளையாட்டு
New-Zealand-team 2023-12-17

Source: provided

ஹாமில்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்.

சுற்றுப்பயணம்... 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது.

லாதம் அரைசதம்... 

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் வில் யங் 42 ரன்னிலும், அடுத்து வந்த வில்லியம்சன் 44 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டாம் லாதம் அரைசதம் அடித்த நிலையில் 63 ரன்னில் அவுட் ஆனார்.

சாண்ட்னெர்...

இதையடுத்து களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 ரன், டேரில் மிட்செல் 14 ரன், டாம் பிளெண்டல் 21 ரன், க்ளென் பிலிப்ஸ் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த சாண்ட்னெர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் மேட் ஹென்றி 8 ரன், டிம் சவுதி 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து வில்லியம் ஓ ரூர்க் களம் இறங்கினார்.

சாண்ட்னெர் அரைசதம்... 

மறுபுறம் சாண்ட்னெர் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னெர் 50 ரன்னுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து