முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்புதீன் நைப்பிற்கு அபராதம்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      விளையாட்டு
Afghanistan 2024-06-25

Source: provided

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் ஹராரேவில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறக்கிய ஜிம்பாப்வே17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வேயை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின்போது நடுவருக்கு எதிராக பேசியதற்காக ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஆட்டத்தின் 11வது ஓவரில் நடுவருக்கு எதிராக பேசியதாக குல்புதீனுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.  

_______________________________________________________________________

டிம் சவுதி புதிய மைல்கல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் வில் யங் 42 ரன்னிலும், அடுத்து வந்த வில்லியம்சன் 44 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டாம் லாதம் அரைசதம் அடித்த நிலையில் 63 ரன்னில் அவுட் ஆனார்.

டிம் சவுதி தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். முதல் இன்னிங்ஸில் டிம் சவுதி 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 98 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் கிறிஸ் கெயிலின் வாழ்நாள் சாதனையை சமன் செய்துள்ளார். கிறிஸ் கெயில் 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 98 சிக்சர்கள் அடித்துள்ளார். டிம் சவுதி தற்போது வரை 98 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் கூடுதலான சிக்சர்கள் அடித்தால் சவுதி, கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் (133 சிக்ஸ்) முதல் இடத்திலும், பிரண்டன் மெக்கல்லம் (107 சிக்ஸ்) 2ம் இடத்திலும், ஆடம் கில்கிறிஸ்ட் (100 சிக்ஸ்) 3ம் இடத்திலும் உள்ளனர்.

_______________________________________________________________________

கோலி குறித்து கிருணால் பாண்ட்யா

எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடுவது குறித்து கிருணால் பாண்ட்யா தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நம் அனைவருக்கும் விராட் கோலி யார் என்பதும், அவர் என்ன செய்துள்ளார் என்பதும் நன்றாக தெரியும். அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. கிரிக்கெட் மீதான அவரின் காதலும், களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமும் அணியின் மற்ற வீரர்களுக்கும் எளிதாக பற்றிக் கொள்ளக் கூடியது.

அவரின் எனர்ஜி எப்போதும் பிடித்தமானது. அவரை போலவே எனக்கும் வெற்றி பெறுவது அதிகமாக விருப்பம். களத்தில் என்ன நடந்தாலும் இறுதியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பேன். சில நேரங்களில் அதுதான் நமக்குள் இருக்கும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும். அதேபோல் இறுதியாக கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. தனிநபரின் சாதனையை விடவும் அணி வெற்றி பெறுவது முக்கியமாகும். அதேபோல் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது. ஆர்.சி.பி அணி குறித்து நான் அறிந்தது வரை, அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு கூடுதலாக ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

_______________________________________________________________________

தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி சென்சூரியனில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிகை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 206 ரன்கள் எடுத்தது. 

பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி சைம் ஆயுப் 98 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 207 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். இதனால் 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரீசா ஹென்ரிக்ஸ் சதமடித்து அசத்தினார். ரஸ்ஸி வான் டசென் அரைசதமடித்தார். இந்த வெற்றியால் 2-0என தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியுள்ளது .

_______________________________________________________________________

மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு

சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சீனா​வின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்​பியன் பட்டம் வென்​றார் இந்திய கிராண்ட் மாஸ்​டரான 18 வயதான டி.கு​கேஷ். இதன் மூலம் இளம் வயதில் உலக சாம்​பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை​யும் படைத்​தார் தமிழகத்​தைச் சேர்ந்த குகேஷ். இந்நிலை​யில் அவருக்கு, உலகின் முதல் நிலை வீரரரும் உலக சாம்​பியன்​ஷிப்​பில் 5 முறை பட்டம் வென்ற​வருமான நார்வே நாட்​டைச் சேர்ந்த பிரபல வீரரான மேக்னஸ் கார்​ல்சன் பாராட்டு தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக மேக்னஸ் கார்ல்சன் கூறிய​தாவது: குகேஷுக்கு இது ஒரு நம்ப​முடியாத சாதனை, முதலில் அவர் சென்னை​யில் நடைபெற்ற ஃபிடே சர்க்​யூட் போட்​டி​யில் தேவைக்கு தகுந்​தபடி வெற்றி பெற்​றார். அதன் பின்னர், கேண்​டிடேட்ஸ் போட்​டி​யில் அற்புதமான செயல்​திறனை வெளிப்​படுத்​தினார்.  2 ஆண்டுகள் இந்த பட்டத்தை அவர், வைத்​திருப்​பார். உலக சாம்​பியன்​ஷிப்பை வென்​றுள்ளது அவருக்கு ஊக்கமளிக்​கும். இனிமேல் அவர், வரும் போட்​டிகளில் சிறந்த முடிவுகளை பெறு​வார். இப்போது அவர், உலகின் நம்பர் 2 வீரராக மாறக்​கூடும். எதிர்​காலத்​தில் முதல் நிலை வீரராகலாம். இது ​முடிந்து ​விட​வில்லை. இன்னும் பல வெற்றிகள் வந்து சேரும். இவ்​வாறு மேக்​னஸ் ​கார்ல்​சன்​ கூறினார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து