முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலமைப்பு சாசன விவகாரம்: பாராளுமன்றத்தில் காரசார விவாதம்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      இந்தியா
Modi -2024-07-02

Source: provided

புதுடெல்லி : அரசியலமைப்பு சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவை அடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதம் பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதமாக மாறியது.

இந்திய அரசியலமைப்பு சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சாசனம் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற விவாதத்தில் அரசியலமைப்பு சாசனம் குறித்து எம்.பி.க்கள் பேசினர்.

இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, அரசியலமைப்பு சாசனம் உருவாவதில் பெண்களின் முன்னேற்றம் முக்கிய பங்காற்றியுள்ளது. அரசியலமைப்பில் பெண்களுக்கு முதலில் அதிகாரம் வழங்கியது இந்தியாதான்.

ஆயிரம் ஆண்டுகால ஜனநாயக பாரம்பரியத்தை கொண்டுள்ளதால் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகநாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் ஆகும். அரசியலமைப்பு சாசனம் கொண்டுவரப்பட்டு 75 ஆவதை கொண்டாடும் நேரம் இது. இந்த கொண்டாட்டத்தில் பாராளுமன்றமும் பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் ஜனநாயக பாரம்பரியம் மீது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்துள்ளனர்.

பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமையை மிகவும் காலதாமதமாக வழங்கின. ஆனால் இந்தியாவில் அரசியலமைப்பு சாசனம் ஆரம்பத்திலேயே பெண்களுக்கு இந்த உரிமையை வழங்கியது. அரசியலமைப்பு சாசனம் உருவாவதில் பெண்கள் முன்னேற்றம் மிகப்பெரிய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியதாகவே உள்ளது. பாராளுமன்றம், மந்திரி சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது.

அரசியலமைப்பு சாசனம் கொண்டுவரப்பட்டு 75 ஆவதை கொண்டாடும் நேரம் இது. இந்த கொண்டாட்டத்தில் பாராளுமன்றமும் பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் ஜனநாயக பாரம்பரியம் மீது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்துள்ளனர். பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமையை மிகவும் காலதாமதமாக வழங்கின. ஆனால் இந்தியாவில் அரசியலமைப்பு சாசனம் ஆரம்பத்திலேயே பெண்களுக்கு இந்த உரிமையை வழங்கியது. அரசியலமைப்பு சாசனம் உருவாவதில் பெண்கள் முன்னேற்றம் மிகப்பெரிய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியதாகவே உள்ளது. பாராளுமன்றம், மந்திரி சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகாலத்தில் எங்கள் அரசின் கொள்கைகள், முடிவுகள் அனைத்தும் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளன' என்றார்.

இதையடுத்து பேசிய ராகுல் காந்தி தெரிவித்ததாவது..

அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பது பற்றி பேசும் பாஜக, அதன்மூலம் வீர் சாவர்க்கரை கேலி செய்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் நடைபெற்ற அரசியல் சாசன விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று உரையாற்றினார். அப்போது, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தவாதியாகக் கருதப்படும் சாவர்க்கர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அரசியல் சாசனத்தில் எதுவும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக மனுஸ்மிருதியை ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

மனுஸ்மிருதி என்பது நமது இந்து தேசத்தில் வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படக்கூடிய வேதமாகும். நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறைக்கு பண்டைய காலத்தில் இருந்து அதுதான் அடிப்படை. நமது தேசத்தின் பல நூற்றாண்டு கால ஆன்மிக மற்றும் தெய்வீக அணிவகுப்பை இந்த புத்தகம்தான் குறிக்கிறது. மனுஸ்மிருதி இன்று சட்டமாக உள்ளது.' இதுதான் சாவர்க்கர் கூறியவை. இதனால்தான் சண்டை நிகழ்கிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்று கூறுவதன் மூலம் நீங்கள் (பாஜக) சாவர்க்கரை கேலி செய்கிறீர்கள்.

சாவர்க்கர் குறித்து நான் எனது பாட்டியிடம் (இந்திரா காந்தி) கேட்டேன். அதற்கு அவர், சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து கொண்டதாகவும், அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார். சாவர்க்கர் குறித்த எனது பாட்டியின் நிலைப்பாடு இதுதான்.

துரோணாச்சாரியார், ஏக்லைவனின் கட்டைவிரலை வெட்டியது போல், இந்தியாவில் இளைஞர்களின் கட்டைவிரலை பா.ஜ.க. வெட்டுகிறது. மும்பையின் தாராவியை அதானிக்கு கொடுப்பதன் மூலம், ​​சிறு வணிகர்களின் கைவிரலை நீங்கள் வெட்டுகிறீர்கள். விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் நீங்கள் அதானிக்கு பலன் தருகிறீர்கள்.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு பாதுகாப்பு இல்லை. அந்தப் பெண்ணின் குடும்பம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை அரசாங்கம் செய்யாவிட்டால், இன்டியா கூட்டணி செய்யும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து