முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகளவில் குவியும் பக்தர்கள்: திருப்பதியில் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம்

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-29

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு நெருங்குவதையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதாலும் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.நேற்று முன்தினம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே கோவிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்தன. தரிசன டோக்கன் இல்லாமல் நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ரூ.300 விரைவு தரிசனத்தில் 4 மணிநேரத்திலும், இலவச நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் 66,715 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24,503 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதற்கு தகுந்தாற்போல் பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் திருப்பதிக்கு வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து