முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா சுரங்க இடிபாடு விபத்து: 6-வது நாளாக தொடர்ந்த மீட்புப்பணிகள்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      இந்தியா
Telangana-Tunnel-Collapse

நாகர்னூல், ஸ்ரீசைலம் இடதுகரைக் கால்வாய் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 8 பணியாளர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக நீடித்து வருகிறது. 

இதுகுறித்து நாகர்னூல் காவல் கண்காணிப்பாளர் வைபவ் கெய்க்வாட் கூறுகையில், “கேஸ் கட்டிங் இயந்திரம் ஏற்கனவே சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டுவிட்டது. இரவில் அவர்கள் துளையிடும் பணிகளை மேற்கொண்டனர். நேற்றிரவே பணிகள் தொடங்கி விட்டன. உள்ளே சிக்கியிருப்பவர்களை இன்று (நேற்று) சென்றடைய முடியுமா என்று நான் கூற முடியாது.” என்றார்.

முன்னதாக தெலங்கானா அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி   கூறுகையில், “சுரங்கத்துக்குள் விழுந்திருக்கும் இடிபாடுகள் கேஸ் கட்டிங் இயந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டு அகற்றப்படும். பின்பு ராணுவத்தினர், கடற்படை, எலி வலை சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளே சிக்கி இருப்பவர்களை மீட்க வேறு முக்கியமான முயற்சிகளை மேற்கொள்ளவார்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஸ்ரீசைலம் சுரங்கப்பாதை கட்டுமான பணியினை மேற்கொண்டு வரும்  ஜே பி குழுமத்தின் நிறுவனத் தலைவர் ஜெய்பிரகாஷ் கவுர் நேற்று கூறுகையில், “இதுபோன்ற கடினமான பணிகளை மேற்கொள்ளும் போது விபத்துக்கள் நடக்கவே செய்யும். உள்ளே சிக்கியிருப்பவர்களை பத்திரமாக வெளியே கொண்டுவர மீட்புக்குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவருகின்றனர்.” என்றார்.

முன்னதாக தெலங்கானா மாநிலம் நாகர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாயில் கட்டப்பட்டு வரும் சுரங்காப்பாதையின் ஒரு பகுதி பிப்.22-ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்கள். இதில் இரண்டு பேர் இன்ஜினீயர், 2 ஆபரேட்டர்கள், நான்கு தொழிலாளர்களும் அடங்குவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து