முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவுக்கு இயக்கப்பட்ட 16,000 ரயில்கள்: மத்திய அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      இந்தியா
Ashwini-Vaishnav 1

பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் பௌஷ பொ்ணமியை முன்னிட்டு கடந்த ஜன. 13 தொடங்கி, 45 நாள்களுக்கு நடைபெற்ற இந்த மகத்தான விழாவில் 66 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடி வழிபட்டனா். தொடக்க நாள்களில் பிரயாக்ராஜில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினசரி கோடிக்கணக்கான பக்தா்கள் நீராடினா். நிகழ்வு நடந்த 45 நாள்களில் சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் என சுமாா் 66 கோடிக்கும் மேற்பட்டவா்கள் சங்கமத்தில் புனித நீராடினா்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று பிரயாக்ராஜில் ரயில்வே துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகைத் தந்தார். அப்போது அவர் பேசுகையில், ”மகா கும்பமேளா நிகழ்வினை மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களால்தான் நாங்கள் 13,000 ரயில்கள் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில், எங்களால் 16,000-க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்க முடிந்தது, சுமார் 4 கோடி முதல் 5 கோடி வரையிலான பக்தர்களை எங்களால் வரவழைக்க முடிந்தது. கும்பமேளாவில் இருந்து திரும்பி வரும் பக்தர்களைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் ஒவ்வொரு நிலையம், மண்டலம், பிரிவுகளிலும் இயக்கப்பட்ட செயல்பாட்டு அறைகள் ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கியது. 45 நாள்கள் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று முடிந்தாலும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு மக்கள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து