முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸ்: கட்டிடத்தில் திடீர் தீ விபத்து - 8 பேர் பலி

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      உலகம்
Philippines-Fire-2025-02-27

மணிலா, குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

குடியிருப்பில் இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்ததால் தீப்பற்றியதை உடனடியாக உணரவில்லை. தீ பரவிய நிலையில், எழுந்து வெளியேறுவதற்குள் நாலாபுறமும் தீ சூழ்ந்துவிட்டது. இதனால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மூன்று தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் 6 பேரின் உடல்களும், தரைத்தளத்தில் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. 2-வது தளத்தில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து