முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 660 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 1046 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      தமிழகம்
CM-2-2025-02-27

சென்னை, ரூ.660 கோடியில் கட்டப்பட்ட 1046 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையையும்  அவர் வெளியிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (27.2.2025) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டம், செனாய் நகரில் ரூ.131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கே.கே நகரில் ரூ.51 கோடியே 29 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்தார்.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், ராஜகுளிப்பேட்டையில் ரூ.43 கோடியே 81 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 116 அடுக்குமாடி குடியிருப்புகள்; சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில் ரூ.433 கோடியே 59 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 570 அடுக்குமாடி குடியிருப்புகளையும் அவர் திறந்துவைத்தார். ஆக மொத்தம் ரூ.659 கோடியே 96 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டம், செங்குளத்தில் ரூ.116 கோடியே 55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதேபோல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15 கோடியே 81 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை அவர் திறந்துவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து