முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்துடனான போட்டி மழையால் ரத்து: கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      விளையாட்டு
Bangladesh match called

லாகூர், சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி... 

பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. குரூப்-பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறிவிட்ட நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கான போட்டியில் இருக்கின்றன.

3-வது இடத்திற்கு...

இந்த நிலையில், அரையிறுதியில் இருந்து வெளியேறிவிட்ட நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதும் இந்தத் தொடரின் 9-வது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இரு அணிகளும் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டாலும், 3-வது இடத்தைப் பிடிப்பதில் போட்டி நிலவியது. மைதானத்தைச் சுற்றிலும் மேகங்கள் சூழ்ந்து இருந்ததாலும் இந்தப் போட்டி 88 சதவீதம் மழையால் பாதிக்கப்பட்டதாலும் டாஸ் கூட போடாமல் போட்டி ரத்துசெய்வதாக அறிவிக்கப்பட்டது. 

கடைசி இடம்...

இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து அளிக்கப்பட்டது. ஒரு வெற்றிகூட இல்லாமல் வங்கதேசம் மூன்றாவது இடத்தையும், பாகிஸ்தான் அணி 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. இதற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து