முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி இறுதிப் போட்டியில் விதர்பா 379 ரன்கள் குவிப்பு

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      விளையாட்டு
Vidarbha-2025-02-27

நாக்பூர், ரஞ்சி இறுதிப் போட்டி 2ஆம் நாளில் விதர்பா அணி 379 ரன்கள் குவித்துள்ளது.

விதா்பா 379 ரன்கள்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதா்பா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் சோ்த்திருந்தது. 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 86 ரன்கள் சோ்த்து சதத்தை நோக்கி முன்னேறிய கருண் நாயா், ரன் எடுப்பதற்கான ஓட்டத்தில் மேல்வருடன் ஏற்பட்ட குழப்பத்தில் ரன் அவுட் செய்யப்பட்டாா். தற்போது 2ஆம் நாள்  ஆட்டத்தில் 379ளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததது. டேனிஸ் மேல்வா் 153 ரன்கள் அடித்து அசத்தினார். 15 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கும். 

கேரளா 131/3...

இந்தப் போட்டியில் கேரள அணி சார்பில் ஈடன் ஆப்பிள் டாம் 3 விக்கெட்டுகளும் நிதீஷ், பாசில் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.  தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய கேரளா அணி, 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.  அந்த அணியில் ஆதித்ய சர்வாதே 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

ரசிகர்கள் ஆவல்...

ஒருவேளை ஆட்டம் டிரா ஆனால் முதல் இன்னிங்ஸ் ரன்களை அடிப்படையாக வைத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்கள் என்பதால் இந்த இன்னிங்ஸ் முக்கியமானதாகும். முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள கேரள அணி வெற்றி பெறுமா என அந்த மாநில ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து