எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 26 - 11 லட்சம் மாணவ_மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9_ந்தேதி வரை நடைபெற உள்ளது..
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_
தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவுரையின்படி, மாணவர்களின் நலன்கருதி பல்வேறு புதிய நடைமுறைகள் இவ்வாண்டு தேர்வுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது 9.15 மணிக்கு மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
தேர்வறையில் மாணவ_மாணவியரின் மன இறுக்கத்தைப் போக்கி, விடைகளைத் திட்டமிட்டு தேர்வுகளை நன்முறையில் எழுதுவதற்காக, வினாத்தாளினை மாணவ_மாணவியருக்கு வழங்கியவுடன், அதனை முழுமையாகப் படிப்பதற்காக (9.15 மணி முதல் 9.25 மணி வரை) 10 நிமிட கால அவகாசம் வழங்கப்படுகிறது.
விடைத்தாளுடன் இணைக்கப் பட்டுள்ள முகப்புப்படிவத்தில் அச்சிடப்பட்ட தேர்வர்களின் புகைப்படம், பதிவெண் விவரங்களை தேர்வர் சரிபார்த்துக்கொள்ள (9.25 மணி முதல் 9.30 மணி வரை) 5 நிமிட கால அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வு நேரம் 9.30 மணி முதல் 12.00 மணி வரை ஆகும்.
மாணவ_மாணவிகளுக்கு விடைத்தாள் வழங்கிய பின்னர், விடைத்தாளில் பூர்த்தி செய்யவேண்டிய தேர்வரின் பதிவெண் முதலான விவரங்களை பதற்றத்தின் காரணமாக தேர்வர்கள் தவறான பதிவுகளை மேற்கொள்வதால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு தேர்வுத்துறை மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அச்சிட்ட முகப்புச்சீட்டை விடைத்தாளுடன் இணைத்தே வழங்குகிறது. மாணவர் முகப்புச்சீட்டில் அச்சிடப்பட்ட விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட்டால் மட்டுமே போதுமானது.
முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 30 பக்கங்களாக இவ்வாண்டு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது. தேர்வர்களின் முன்னிலையில் வினாத்தாள் உறை திறக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.
தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில், தேர்வு நேரங்களில் அப்பள்ளிகளை சார்ந்த தாளாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,552 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10,38,876 மாணவ_மாணவியர்கள் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 5,30,462 பேர் மாணவியர் 5,08,414 பேர் ஆவர்.
பள்ளி மாணவர்களைத் தவிர 286 தேர்வு மையங்களில் 74,647 தனித்தேர்வர்கள் தேர்வெழுத பதிவு செய்து உள்ளனர்.
மொத்தத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 பேர் எழுதுகிறார்கள்.
தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க தமிழ்நாடு முழுவதிலும் 5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக அதிகரிப்பு
23 Nov 2024சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று (நவ. 23) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையான நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக விலை உயர்வு தொடர்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-11-2024.
23 Nov 2024 -
அமெரிக்காவின் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது : அதானி குழும தலைமை நிதி அதிகாரி கண்டனம்
23 Nov 2024புதுடெல்லி : அதானி குழுமத்தின் 11 பொது நிறுவனங்களில் எந்த நிறுவனமும் எந்த தவறும் செய்யவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகே
-
உக்ரைன் மீது தாக்குதல் தீவிரம்: ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புடின் உத்தரவு
23 Nov 2024மாஸ்கோ : உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க உ
-
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 25, 26--ல் ஆரஞ்சு அலர்ட் : சென்னை வானிலை மையம் அறிவிப்பு
23 Nov 2024சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
-
சபரிமலைக்கு தமிழக திருக்கோவில்கள் சார்பில் பிஸ்கெட் பாக்கெட், பிளாஸ்க்குகள் : அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார்
23 Nov 2024சென்னை : தமிழக திருக்கோவில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதல்கட்டமாக பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணியி
-
விழுப்புரத்தில் வரும் 29-ம் தேதி சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்பு விழா : ராமதாஸுக்கு அழைப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்
23 Nov 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 29-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு சார்பில் பா.ம.க.
-
ஐயப்பன் குறித்து சர்ச்சை பாடல்: இயக்குனர் ரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி மீது புகார்
23 Nov 2024கோவை : கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், சுவாமி ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் ரஞ்சித் மற்றும்
-
உ.பி. கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: டிச. 13-ல் பிரதமர் மோடி பிரயாக்ராஜ் செல்கிறார் : 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்
23 Nov 2024புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ஜனவரியில் தொடங்கும் மகா கும்பமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி டிசம்பர் 13-ம் தேதி பிரயாக்ராஜ் செல்கிற
-
கர்நாடகா இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி
23 Nov 2024பெங்களூரு : கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.
-
மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது: உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி ஜலுஷ்னி கருத்து
23 Nov 2024கீவ் : ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கி விட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான
-
9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: சீனா அறிவிப்பு
23 Nov 2024பெய்ஜிங் : ஜப்பான், பல்கேரியா, ருமேனியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது.
-
கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு : நாளைக்குள் விண்ணப்பிக்க கெடு
23 Nov 2024சென்னை : கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நாளை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக உயர்த்த தேவஸ்தானம் முடிவு
23 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை தினசரி 80 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
-
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்? - ஏக்நாத் ஷிண்டே பதில்
23 Nov 2024தானே : பா.ஜ.க.
-
வனத்துறையின் கட்டுப்பாட்டில் மீண்டும் வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு வர வேண்டும்: ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
23 Nov 2024சென்னை : வேட்டைத் தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலி
-
அதானியை கைது செய்ய வலியுறுத்தி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
23 Nov 2024சென்னை : சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்
-
அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்களின் பட்டியல் : போக்குவரத்துத்துறை இணையத்தில் வெளியீடு
23 Nov 2024சென்னை : போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
வன்முறை அதிகரிப்பு: மணிப்பூருக்கு விரைந்த 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்
23 Nov 2024இம்பால் : மணிப்பூரில் வன்முறை மீண்டும் அதிகரித்து வருவதால், 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
-
மேகாலயா இடைத்தேர்தல்: காம்பேக்ரே தொகுதியில் முதல்வரின் மனைவி மெஹ்தாப் பூண்டி வெற்றி
23 Nov 2024அகர்தலா : மேகாலயா மாநிலம் காம்பேக்ரே சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாநில முதல்வரின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா வெற்றி பெற்றார்.
-
திருப்பதியில் பழமை வாய்ந்த ராமர் சிலை சீரமைப்பு
23 Nov 2024திருப்பதி : திருப்பதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமர் சிலை ஆகம முறைப்படி சீரமைக்கப்பட்டுள்ளது.
-
4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வயநாட்டில் பிரியங்கா வெற்றி
23 Nov 2024வயநாடு : வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இதற்கு முன் அங்கு வெற்றி பெற்ற ராகுல் காந்தியின் சாதனையை
-
மராட்டியத்தில் பா.ஜ.க. சரித்திர வெற்றி பெற்றுள்ளது: தமிழிசை
23 Nov 2024சென்னை : மராட்டிய சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளையும் தாண்டி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
-
மகராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் ? - மகாயுதி தலைவர்கள் முடிவு செய்வர்: பட்னாவிஸ் பேட்டி
23 Nov 2024மும்பை : மகராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மகாயுதி கூட்டணியில் உள்ள தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், அதில் எவ்வித சர்ச்சையும் இல்லை என்றும் அம்மா
-
த.வெ.க. மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்தளித்த விஜய்
23 Nov 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் விஜய் கவுரவப்படுத்தியுள்ளார்.