முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா விடுதலை பெற்ற 60-வது ஆண்டு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

சனிக்கிழமை, 19 டிசம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பனாஜி : கோவா விடுதலை பெற்ற 60-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம், 450 ஆண்டுகால போர்ச்சுகீசியர்கள் ஆட்சியிலிருந்து டிசம்பர் 19, 1961 அன்று விடுதலை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்தநாள் கோவா விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.  பனாஜியில், 60- வது கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மாநில அரசு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தது. நேற்று மாலை நடைபெற்ற சிறப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

கோவா விடுதலை தின சிறப்பு நிகழ்விவைக் கொண்டாடும், கோவாவின் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் கோவா விடுதலைக்காக கடுமையாக உழைத்தவர்களின் துணிச்சலை பெருமையுடன் நினைவு கூர்கிறோம்.  அடுத்து வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பதிவில்,  பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவா மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், உங்கள் தொடர்ச்சியான ஆதரவுடன், கோவா தொடர்ந்து வளர்ச்சியடையும், வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து