முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் நாளை பிரசாரம்

ஞாயிற்றுக்கிழமை, 14 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நாளை 16-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இடைப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். நாளை 16-ம் தேதி காலை 7:00 மணிக்கு முசிறி, தோகைமலை வழியே விராலிமலை செல்கிறார்.

அன்று விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆவணம் கைகாட்டி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரசாரம் செய்கிறார். 

அடுத்து 17-ம் தேதி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், நாச்சியார் கோவில், குடவாசல், மன்னார்குடி, திருவாரூர் சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார்.

அங்கு, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இரண்டு நாட்களில், 17 சட்டசபை தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து