முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 27 ஜூன் 2024      விளையாட்டு
27-Ram-50

Source: provided

சென்னை: இந்தியா- தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் மகளிர் டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று தொடங்குகிறது. 

சுற்றுப்பயணம்... 

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. பெங்களூரில் நடந்த இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்திலும், 2- வது போட்டியில் 4 ரன்னிலும், கடைசி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

ஒரே ஒரு டெஸ்ட்... 

இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஜூலை 1- ந் தேதி வரை இந்தப் போட்டி 4 நாட்கள் நடக்கிறது. மந்தனா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

இலவசமாக காண.... 

இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காணலாம். 'சி, டி, இ', மற்றும் 'ஐ,ஜே', 'கே' கேலரிகளின் கீழ் அளவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும். டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜூலை 5, 7 மற்றும் 9-ந் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து