முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் கனமழை: டெல்லியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      இந்தியா
Delhi 2024-06-28

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். 

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்லி முழுக்க தண்ணீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. வாகனங்கள் நீரில் மூழ்கின. கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதே போன்று டெல்லியை சுற்றியுள்ள ஜங்புறா, ஆர்.கே. ஆஷ்ரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.   

டெல்லியின் வசந்த விகார் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில் பணியாற்றிய பணியாளர்கள் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தனர். இவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.  

டெல்லி முழுக்க கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து