முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      இந்தியா
Delhi-1 2024-06-28

Source: provided

புதுடெல்லி : டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

 டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

 இந்த சூழலில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன. 

உள்ளே சிக்கியிருந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.  டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் டெர்மினல் 1-ல் இருந்து விமானப் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து