முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஸ்புல்லா தலைவர் மரணம்: இஸ்ரேலுக்கு எதிராக காஷ்மீரில் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
Kashmir-1 2024-03-29

Source: provided

ஸ்ரீநகர் : ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை கண்டித்து பட்காம் மற்றும் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக,  லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லா   கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் ராணுவம் கொன்றதை கண்டித்து  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. பட்காமில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். 

இதேபோல் ஸ்ரீநகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஹசனாபாத், ரெய்னாவாரி, சைதாகடல், மீர் பெஹ்ரி மற்றும் அஷாய்பா ஆகிய பகுதிகளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி முழக்கமிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து