முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      தமிழகம்
Vembakotai 2023-05-25

Source: provided

விருதுநகர் : வெம்பக்கோட்டை அகழாய்வில்  17-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தென்னிந்திய தங்க காசு என சொல்லப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900-க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. 

இவை அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெம்பக்கோட்டையில் தற்போது 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில்  17-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தென் இந்திய தங்க காசு என சொல்லப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 

தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில் 6 இதழ் கொண்ட பூ போன்ற வடிவமும், மற்றொரு பக்கத்தில் புள்ளிகள் மற்றும் கோடுகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அகழாய்வு பணியில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதாக தொல்லியல்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து