முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது அறிவிப்பு : சிறந்த நடிகராக ஷாருக்கான் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      சினிமா
Shahrukh-Khan 2024-03-29

Source: provided

 அபுதாபி : அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில்   சிறந்த படத்திற்கான விருதை அனிமல் வென்றது, ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்வானார். ஜவான் படத்தில் சிறப்பாக நடித்தற்காக, ஷாருக்கான் விருதை வென்றார். சிறந்த நடிகையாக, ராணி முகர்ஜி தேர்வானார். 

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா, யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. மூன்று நாள்கள் நடக்கும் இந்த விழாவானது, கடந்த  27-ம் தேதி அன்று தென்னிந்தியத் திரைப்படத் துறைகளின் கொண்டாட்டமாக துவங்கியது. 

இரண்டாம் நிகழ்வாக நேற்று முன்தினம், பாலிவுட் முக்கிய இடத்தைப் பிடித்தது, அதன் தொகுப்பாளர்களான சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தௌபா தௌபாவின் விக்கி கவுஷல் மற்றும் திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹர் ஆகியோர் இந்த விழாக்களில் கலந்து கொண்டதால் அது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. 

மூன்றாம் நாள் நிகழ்வாக, நேற்று ஹனி சிங், ஷில்பா ராவ் மற்றும் ஷங்கர்-எஹ்சான்-லாய் போன்ற கலைஞர்கள் நிகழ்ச்சியை நடத்தினர்.  இதில் சிறந்த படமாக அனிமல், சிறந்த இயக்குனராக விது வினோத் சோப்ரா(12 பெயில்), சிறந்த நடிகராக ஷாருக்கான்(ஜவான்), சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி(மிஸஸ் சட்டர்ஜி வெர்செஸ் நார்வே) விருது பெற்றனர். 

சிறந்த துணை நடிகராக அனில்கபூர்(அனிமல்), சிறந்த துணை நடிகையாக ஷபனா ஆஷ்மி( ராக்கி அவுர் ரானி கி பிரேம் கஹானி), சிறந்த வில்லன் நடிகராக பாபி தியோல்(அனிமல்), சிறந்த பாடகராக புபேந்தர் பாபல்(அனிமல்), சிறந்த பாடகியாக ஷில்பா ராவ் (ஜவான்) ஆகியோர் விருது பெற்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து