முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் விமானப்படை புதிய தலைமை தளபதியாக இன்று பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
A P Singh 2024-03-29

Source: provided

புதுடெல்லி : விமானப் படை புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று (செப். 30) பதவியேற்கவுள்ளார். தற்போது, விமானப்படை தளபதியாக இருக்கும் ஏர் மார்ஷல் விவேக் ராம் செளத்ரி செப். 30-ம் தேதியுடன் (நேற்றுடன்) ஓய்வு பெற்றார். இதனையடுத்து அந்தப் பதவிக்கு ஏ.பி. சிங் என்றழைக்கப்படும் அமர் பிரீத் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு பிப்ரவரி முதல் விமானப் படையின் துணைத்தளபதியாக இருக்கும் ஏ.பி. சிங், இன்று விமானப் படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார். 1984-ல் விமானப்படையில் இணைந்த ஏ.பி. சிங், தேசிய பாதுகாப்பு அகாதெமி, குன்னூரின் வெல்லிங்டன்னில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி, தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

மிக் - 27 போர் விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். சிறப்பாக பணியாற்றியதற்காக 2019 ஆம் ஆண்டு அதி விஷிஷ்த் சேவை பதக்கம் மற்றும் 2023 ஆம் ஆண்டில் பரம் விஷிஷ்த் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து