முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம், ஷாஹீன் ஷா அப்ரிடி நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      விளையாட்டு
13-Ram-58-1

Source: provided

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன் எடுத்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 150 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்சில் 54.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 220 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 47 ரன் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை (15ம் தேதி) தொடங்குகிறது. இந்த சூழலில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் அணியாக மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. அதாவது, ஒரு போட்டியில் முதல் இன்னிங்சில் 500+ ரன்கள் அடித்தும் கடைசி இன்னிங்சில் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது, மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது . முன்னணி வீரர்களான பாபர் அசாம் , ஷாஹீன் ஷா அப்ரிடி , நசீம் ஷா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணி.,  ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல் (துணை கேப்டன்), அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், ஹசீபுல்லா , கம்ரான் குலாம், மெஹ்ரான் மும்தாஜ், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான் , நோமன் அலி, சைம் அயூப், சஜித் கான், சல்மான் ஆகா , ஜாஹித் மெஹ்மூத்.

ஜடேஜாவின் மனைவி பூஜை 

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ரிவாபா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். குஜராத் சாட்டமன்ற தேர்தலில் தனது மனைவிக்கு ஆதரவாக ரவீந்திர ஜடேஜா பிரசாரம் செய்தார். சமீபத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரவீந்திர ஜடேஜா, பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில், ரிவாபா ஜடேஜா துப்பாக்கியை வைத்து பூஜை செய்தார். ஜாம்நகரில் விமரிசையாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ரிவாபா ஜடேஜா, பயபக்தியோடு துப்பாக்கிக்கு மலர் வைத்து பூஜை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

ஜானிக் சினெர் சாம்பியன் 

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. இதில் நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் 33-ம் நிலை வீரரான தாமஸ் மசாக்கை (செக்குடியரசு) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் சினெர் இந்த ஆண்டு இறுதிவரை தரவரிசையில் முதலிடத்தில் நீடிப்பார். இத்தகைய பெருமையை பெறும் முதல் இத்தாலி வீரர் சினெர் ஆவார்.மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்டில் டெய்லர் பிரிட்சை (அமெரிக்கா) வீழ்த்தினார். 

இதன்படி நேற்று நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை 7-6(4), 6-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இத்தாலி வீரர் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றிக்குப்பின்னர் பேசிய ஜானிக் சினெர், "இது மிகவும் கடினமான போட்டி, வெளிப்படையாக, நோவாக்கிற்கு எதிராக விளையாடுவது எங்களிடம் உள்ள கடினமான சவால்களில் ஒன்றாகும். நான் நிலைமையை எவ்வாறு கையாண்டேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் முதல் செட்டில் சிறப்பாக ஆடினார். அவரை நிறுத்த என்னால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஒரு நல்ல டை-பிரேக் விளையாடினேன், இது இரண்டாவது செட்டில் நன்றாகத் தொடங்க நம்பிக்கையை அளித்தது" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து