முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரண தண்டனை

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      உலகம்
Cort 2023 07-15

ரியாத், சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் சென்று பணம் சம்பாதிப்பதில் சவுதியை தான் பலரும் தேர்வு செய்கின்றனர். இந்தியர்களும் அதிகம் செல்லும் நாடாக சவுதி உள்ளது. இங்கு இஸ்லாமிய சட்டங்கள் மிக கடுமையானதாக உள்ளது. குற்றம் புரிந்தவர்களுக்கு குற்றம் நடந்த இடத்தில் கடும் தண்டனை விரைவில் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த 2024-ல் 101 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை மருந்து கடத்தல் ஈடுபட்டவர்களே அதிகம் ஆவர். 2022, 2023 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது போன்ற தண்டனை பெறுபவர்கள் இந்த ஆண்டு 3 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு தண்டனை பெற்றவர்களில் பாகிஸ்தானியர்களே அதிகம் அடங்குவர். தண்டனை பெற்ற வெளிநாட்டவர்கள் விவரம் வருமாறு:

பாகிஸ்தான் - 21 பேர், ஏமன் நாட்டவர்கள் - 20 பேர், சிரியா- 14 பேர், நைஜீரியா- 10 பேர், எகிப்து- 9 பேர் , ஜோர்டன், எத்தியோப்பியா தலா 8 பேர், இந்தியா, ஆப்கானிஸ்தான், சூடான் நாட்டவர்கள் தலா 3 பேர் என 101 பேர் மரணத்தண்டனை பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து