முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: சீனா அறிவிப்பு

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      உலகம்
China 2024-11-23

Source: provided

பெய்ஜிங் : ஜப்பான், பல்கேரியா, ருமேனியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த  சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கி கிடந்த சுற்றுலா துறை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. 

இதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.

இவ்வாறு பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் வருகிற 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து