முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறை அதிகரிப்பு: மணிப்பூருக்கு விரைந்த 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      இந்தியா
Manipur-2024-04-20

Source: provided

இம்பால் : மணிப்பூரில் வன்முறை மீண்டும் அதிகரித்து வருவதால், 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ.க.  ஆட்சி நடந்து வருகிறது. தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என மெய்டி சமூகத்தினர் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். 

மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்ந்து வன்முறை, கலவரமாக மாறியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இரு சமூகத்தினர் இடையே அடிக்கடி மோதல், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் ஜிரிபாம் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய கூகி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பாதுகாப்புப் படையினருடன் சண்டையில் ஈடுபட்டனர். அதில், போராட்டக்காரர்கள், 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வன்முறை மீண்டும் தலைதூக்கியது. 

முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், வன்முறை மீண்டும் அதிகரித்து வருவதால், 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர். 

கடந்த 10 நாட்களில், மாநிலம் முழுவதும் 90 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மணிப்பூர் மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் கூறியதாவது: 

நாங்கள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் பாதுாப்பை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். ராணுவம், போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போதைய நிலைமை குறித்து அவர்களுடன் ஆலோசித்தோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து